×

மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய கூலித் தொழிலாளிக்கு வலை

ஊட்டி, டிச. 3: புதுக்கோட்டை சேர்ந்தவர் செல்வகுமார்(43). இவரது மனைவி சத்தியா(25). கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. செல்வகுமாருக்கு மது பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரின் உறவுக்காரான மாரிமுத்து(40). என்வருக்கும், சத்தியாவிற்கும் புதுக்கோட்டையில் இருந்தபோது கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு கீழ்கோத்தகிரி அம்பாள் காலனியில் வசித்து வந்தனர்.

இதனை அறிந்த செல்வகுமார், நேற்று முன்தினம் கீழ்கோத்தகிரி பகுதிக்கு வந்து மாரிமுத்து வீட்டிற்கு சென்று பிரச்னை செய்தார். மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மாரிமுத்துவை வெட்டினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை கோத்தகிரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து சோலூர் மட்டம் போலீசார் வழக்கு பதிவு தலைமறைவாக உள்ள செல்வகுமாரை தேடி வருகின்றனர்.

Tags : lover ,mercenary ,
× RELATED மணல் கடத்திய வாலிபருக்கு வலை