×

கஞ்சா விற்ற டிரைவர் கைது

திருநின்றவூர்: திருநின்றவூர் லலிதாஞ்சலி நகர், ரைஸ் மில் அருகில் கஞ்சா விற்பதாக திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில் எஸ்.ஐ.ஆனந்தன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்துக்கு இடமான சுற்றிக் கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்துப்பிடித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறினார். அவரது பேன்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அதன் எடை 1.100 கிராம். விசாரணையில், திருநின்றவூர் அம்மன் நகர், சூரத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த தினகரன்(27), ஆட்டோ டிரைவர் என தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைதுசெய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது