×

மோடி படம் வைப்பதில் சர்ச்சை ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, டிச.2: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில், கடந்த 23ம் தேதி பிரதமர் மோடியின் படத்தை பாஜ கவுன்சிலர்கள் மாட்டினர். அந்த படம் அகற்றப்பட்டது.  இதையடுத்து மோடியின் படத்தை ஒன்றிய அலுவலகத்தில் வைப்பதற்காக பாஜகவினர் ஊர்வலமாகச் சென்று அலுவலகத்தில் மோடியின் படத்தை மாட்ட முயற்சித்தனர்.இதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி செல்லம்மாள் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாஜவினர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கதவை இழுத்துப் பூட்டினர்.  இதையடுத்து பிடிஓ செல்லம்மாள், அரசு ஜீப்பில் ஏறி கிளம்பிச் செல்ல முயன்றார். அப்போது ஜீப்பை பாஜவினர் முற்றுகையிட்டு சரமாரியாக எட்டி உதைத்தனர்.

எந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச் சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த தோடு நேற்று தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சூறையாடி, வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கிய பாஜகவினரை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மன்னார்குடியில் சங்க வட்ட கிளை தலைவர் இலரா, மாவட்ட இணை செயலாளர்கள் ராஜேந்திரன், மோகன் ஆகியோர் தலைமையிலும், கோட்டூரில் வட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமையிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் வட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் வாசுதேவன், மாவட்ட இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வலங்கைமான்: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகர், பாலசுப்பிரமணியன் மற்றும் பிரபு, ஊராட்சி செயலாளர் சங்கத் தலைவர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டச் செயலாளர் கட்டக்குடி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிகண்டன், மாவட்ட தணிக்கையாளர் கீர்த்திவாசன் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வசந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : protest ,Rural Development Officers Association ,Modi ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...