×

கார்த்திகை தீப வழிபாடு

பொள்ளாச்சி, நவ.30: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் திருகார்த்திகை தீப வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக, பல்வேறு கோயில்களில், நேற்று திருகார்த்திகை தீப வழிபாடு  மிகவும் எளிமையாக நடந்தது. கார்த்திகையையொட்டி, சுப்பிரமணியசாமி கோயில், வெங்கடேசாகாலனி ஐயப்பன்கோயில், கோட்டூர்ரோடு விண்ணளந்த காமாட்சியம்மன், சூலக்கல் மாரியம்மன் கோயில், கடைவீதி மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பிளேக் மாரியம்மன் கோயில் மற்றும் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில் வளாகத்தின் வெளியே, பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு சென்றனர். அதுபோல் திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோயில்களில் பெரிய அளவில் விஷேசம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், நகர் மற்றும் கிராம புறங்களில் பலரும், தங்கள் வீட்டு தீபம் ஏற்றி பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மேலும், ஆங்காங்கே சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Tags : Karthika ,
× RELATED காயல்பட்டினம் அம்மன் கோயில்களில் திருவிளக்கு பூஜை