×

அகல்விளக்கு விற்பனை ஜோர் கூட்டுறவு துறையில்


பெரம்பலூர், நவ. 27: பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் காலியாக உள்ள சேல்ஸ்மேன், கட்டுநர்கள் காலி பணியிடங்களுக்காக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நேர்முக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களுக்கான மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவரும், மண்டல இணைப்பதிவாளருமான செல்வக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கான தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு கடந்த 25ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 25ம் தேதி நடைபெறுவதாக இருந்த நேர்முகத்தேர்வு 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நிவர் புயல் காரணமாக 25, 26, 27, 28ம் தேதிகளில் அறிவிக்கப்பட்ட, 25ம் தேதிக்கு பதிலாக வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நேர்முகத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகிறது. நேர்முக தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : field ,co ,
× RELATED அரக்கோணம் அருகே வயலில்...