×

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரம்

புதுக்கோட்டை, நவ.25: நிவர் புயல்  இன்று மாலை காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நிவர் புயல் தாக்கும் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு புயல் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் விழிப்புணா–்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.மேலும் புயல் பாதுகாப்பு மையங்கள், பொது மக்களை தங்கவைக்கும் கட்டடங்கள், படகுகள் நிறுத்தும் இடம், மீன்பிடி படகுகளை பாதுகாத்தல் போன்றவை குறித்தும் போதிய விழிப்புணா–்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை மீனவா–்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலா–்கள் மூலம் நிலைமை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கல்லணை கால்வாய் மூலம் வரும் தண்ணீர் எவ்வித தடையுமின்றி கடலில் கலக்கும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்நிலைகளான குளங்கள், ஏரிகளில் கரைகளை பலப்படுத்துதல் மற்றும் போதுமான அளவு மணல் மூட்டைகள் உள்ளனவா என்பது குறித்தும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322-222207 என்ற தொலைபேசி எண்ணிலோ தகவல் தொிவிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான முதலுதவி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வழங்க அனைத்துறை அலுவலா–்களும் தயார்நிலையில் உள்ளனா். இதே போன்று சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனங்களும் மீட்புப் பணியில் ஈடுபட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீன்வளத்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறையை சேர்ந்த 11 உயா்அலுவலா–்கள் தலைமையில் 114 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால்வாய்களின் அடைப்பு சரி செய்யப்பட்டு வருகிறது.

பேருந்துகள் நிறுத்தம்
புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மதியம் ஒரு மணி முதல் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது. இதனால் புதுக்கோட்டை, ஆலங்குடி, கீரனூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்துகள் அனைத்து பாதுகாப்பாக டெப்போவில் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : storm ,Nivar ,
× RELATED பள்ளிகளில் தூய்மைப்பணி தீவிரம்