×

நிவர் புயல் மீட்பு பணிக்காக மதுரைக்கு தேசிய பேரிடர் குழுவினர் வருகை

மதுரை, நவ. 25: நிவர் புயல் இன்று தமிழக கடற்கரையை கடப்பதன் எதிரொலியாக, மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகிக்க, தேசிய பேரிடர் மீட்புக்குழு கமாண்டோ பிரிவின் துணை கமாண்டர் ராஜன்பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன், ஊராட்சி உதவி இயக்குநர் செல்லத்துரை  மற்றும் தீயணைப்புத்துறை, காவல்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாவட்டத்தில் மழை பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகள் நடைபெற வேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினர். மேலும் அதற்கு தேவையான ஆலோசனைகளை கலெக்டர்  அதிகாரிகளுக்கு வழங்கினார். பின்பு கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘நிவர் புயல் மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 25 வீரர்கள் மதுரை வந்துள்ளனர். அவர்களுக்கு மழையால் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழையால் அதிகமாக பாதிக்கப்படும் 27 இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு குறித்து, பொதுமக்கள், 0452-1077 என்ற இலவச எண்ணிலும், 95971 76061 வாட்சப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் 84284 25000 என்ற எண்ணிலும், 0452-2530521, 0452- 2530526 இந்த எண்களிலும் மாவட்ட கட்டுப்பாட்டு

Tags : National Disaster Response Team ,Madurai ,Nivar ,
× RELATED மண்ணுக்குள் புதைந்த வீடு: மதுரையில் பரபரப்பு