×

நகர், ஒன்றிய குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்


பொள்ளாச்சி,நவ.25: பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட நகர் மற்றும் ஒன்றிய குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வட்டார கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட வடக்கு, தெற்கு, ஆனைமலை தாலுகாவில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்யும் வகையிலான நடவடிக்கை ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் மற்றும் மே மாத விடுமுறை நாட்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

ஆனால் இந்த முறை கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி செல்ல குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தாமதமானது. கொரோனா ஊரடங்கு பெருமளவு தளர்வால், பல்வேறு விதிமுறைக்குட்பட்டு நகர் மற்றும் கிராம பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்ககெடுப்பு பணி நடத்த முடிவு செய்யப்பட்டன. மேலும் 6 வயது முதல் 15 வயது வரையிலான பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட 5 முதல் 18வயது வரையுள்ள குழந்தைகளையும் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பொள்ளாச்சி கோட்டத்தில் நகர் மற்றும் வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றிய கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டது. இப்பணி வரும் டிசம்பர் 15ம் தேதி வரை என, அரசு வேலை நாட்களில்   நடைபெற உள்ளது. ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி, பணியாளர்கள், சுயஉதவிக்குழுக்கள், கல்வி குழு உறுப்பினர்கள் என தனித்தனி குழுவினர் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை தொடர்ந்துள்ளனர்.

குக்கிராமங்களில் பள்ளி செல்ல குழந்தைகள் எத்தனைபேர் என கணக்கிடும் பணி,  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டார கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘‘நகர், கிராம பகுதிகளில் இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்யும் வகையில், பள்ளி செல்லா குழந்தைகளே இல்லை என்ற நோக்கத்தில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பள்ளிகள் திறப்பு இல்லையென்றாலும், மாணவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து கல்வி கற்கும் வகையில் அரசு ஏற்பாடு செய்யப்பட்டள்ளதால், கல்வி கற்பவர்கள் மற்றும் அடுத்து பள்ளிக்கு செல்வதை தவிர்க்கும் மாணவர்களின் நிலை குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.

நகராட்சியில் 36 வார்டு, வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள், ஆனைமலை ஒன்றியத்தில் 19 ஊராட்சிகள் உள்ள கிராம பகுதிகளில் சுமார் 510க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளிலும் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. அனைவருக்கு கல்வி இயக்க சார்பில் நடக்கும் இப்பணி நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு தளர்வு முழுமையடைந்து பள்ளிகள் திறப்பு இருந்தவுடன் பள்ளி செல்லா குழந்தைகளை அந்தந்த பகுதி இணைப்பு பள்ளியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்றனர்.

Tags : children ,school ,areas ,Nagar ,Union ,
× RELATED கிராமப்புற காவலர் திட்டம் துவக்கம்