×

டாஸ்மாக்கில் மது வாங்கியதை மகள் பார்த்ததால் தாய் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பூர்: கொடுங்கையூர் எழில் நகர் 16வது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ். இவரது மனைவி உமா மகேஸ்வரி (38). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். உமா மகேஸ்வரி குடிப்பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கியதை அவரது மகள் பார்த்துள்ளார். இதனால், மனமுடைந்த உமா மகேஸ்வரி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கில் தொங்கினார். மாலை வீட்டிற்கு சென்ற குழந்தைகள், தாய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் உமா மகேஸ்வரியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் கோதண்டம் (70). இவரது மனைவி ஜெயலட்சுமி (60). இவர்களது மகன் கிருபாகரன் (38), திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர், தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இதனை பெற்றோர் கண்டித்ததால், அவர்களை கிருபாகரன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோதண்டம், அவரது மனைவி பூச்சி மருந்து குடித்து மயங்கினர். அவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் கோதண்டம் உயிரிழந்தார். ஜெயலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : suicide ,
× RELATED தாய், மகள் மாயம்