×

40 குவார்ட்டர் பறிமுதல்

சிவகாசி, நவ.24: சிவகாசியில் அனுமதியின்றி விற்கப்பட்ட 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசி பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில் மகேந்திரன்(28), பூபதி ராஜா(30), மாரியப்பன்(60), மாரிமுத்து(52), தர்மராஜ்(58), முத்துராஜ்(46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED ஊர்வலம் நடத்தினால் டிராக்டர்கள் பறிமுதல்