×

பொறியியல் மாணவரிடம் செல்போன் பறிக்க முயற்சி

தூத்துக்குடி, நவ. 24: தூத்துக்குடி தபால் தந்தி காலனி 11வது தெருவை சேர்ந்தவர் ஆல்வின் ஆபிரகாம் (22).  பொறியியல் கல்லூரி 4ம் ஆண்டு மாணவரான  இவர் நேற்று முன்தினம் இரவு தபால் தந்தி காலனியில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த அர்ஜூனன் (20), செல்வ மனோ (19) ஆகிய இருவரும் ஆல்வின் ஆபிரகாமை தாக்கியதோடு செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால், அங்கு ஆட்கள் வந்ததால் பைக்கையும், செல்போனையும் போட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.  தூத்துக்குடி சிப்காட் போலீசார், பைக்கை கைப்பற்றியதோடு தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.


Tags : engineering student ,
× RELATED லாரி உரிமையாளரிடம் செல்போன் வழிப்பறி