×

லாரி திருட்டு; 2 பேர் கைது

பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பத்மாவதி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன்(38). இவர் அந்த பகுதியில் உள்ள காலி இடத்தில் அவருக்கு சொந்தமான  லாரியை நிறுத்தி வைத்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரியை காணவில்லை. இதுகுறித்து திருவேற்காடு போலீசில் புகாரளித்தார். திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை தேடினர். இந்நிலையில், பெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் திருடப்பட்ட லாரி இருப்பதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது லாரியை எடுக்க வந்த திருவேற்காட்டை சேர்ந்த ராஜா(32), திருவண்ணாமலையை சேர்ந்த அஜித்(21) ஆகிய 2 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். அவர்கள் வேறு ஏதாவது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED சீர்காழியில் கொள்ளையடித்தவர்களில் 2...