×

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாமில் ஆய்வு

ஊட்டி, நவ. 22: ஊட்டி சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான முகாமினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார். ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான முகாமினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நபர்களுக்கு படிவங்களை வழங்கினார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாவட்டத்திலுள்ள 360 வாக்குச்சாவடி மையங்களில் அமைந்துள்ள 683 வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் படிவங்கள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தங்களது வாக்குப்பதிவு செய்யும் வாக்குச்சாவடிகளில் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பது உள்ளிட்ட விவரங்களை நேரடியாக பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் இருந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.

01.01.2021 அன்று 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்களும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ள நடைபெறும் இம்முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இரு நாட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். இந்நிகழ்வின்போது உதவி ஆட்சியர் (ஊட்டி) மோனிகாரானா. ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, தாசில்தார் குப்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Voter list name enrollment camp inspection ,
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ