×

மருத்துவ படிப்புக்கான 7.5% இடஒதுக்கீட்டுக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

புதுக்கோட்டை, அக்.29: தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மரு த்துவ படிப்புக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ஜெயராம், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசுப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த குழப்பமான சூழ்நிலையை போக்கிட கல்வித்துறை சரியான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் உடனடியாக அமைதி அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Governor ,Graduate Teachers' Association ,Tamil Nadu ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்