×

அறுவடைக்கு தயாரான செண்டு மல்லி

வெள்ளகோவில், அக்.23:  ஆயுத பூஜையையொட்டி முத்தூர் சுற்று பகுதியில் செண்டுமல்லி பூ அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டு வலசு, வாய்க்கால் மேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பரவலாக செண்டு மல்லி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. சீசன் காரணமாக, செண்டு மல்லி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. ஆயுத பூஜைக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், பூஜை தினத்தில் விற்பனை செய்வதற்காக விடப்பட்டுள்ளது. பூஜை தினத்துக்கு முதல் நாள் பறிக்கப்பட்டு விற்பனைக்கு வரஉள்ளது. பூ விளைச்சல் அதிகரித்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED அரிகேசவநல்லூர் பகுதியில் அறுவடை...