×

மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மஞ்சூர்,அக்.23: மஞ்சூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மேல்முகாமில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் மத்திய செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மகேந்திரகுமார். முரளி, ரெய்சின் டேவிட், மகேந்திரன், முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதோடு மாதந்தோறும் 7ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க வேண்டும். அவர்களுக்கு மின்வாரிய அடையாள அட்டை வழங்குவதோடு ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags : Trade union demonstration ,office ,engineer ,
× RELATED வேல் யாத்திரைக்கு தடை கோரி எஸ்பி...