×

சென்னை சிறுமி பலாத்காரத்தில் திடீர் திருப்பம் டிக்டாக் காதல் கணவன் போலி டாக்டர் உள்பட 5 பேர் கைது

சென்னை, அக். 16:  சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த16 வயது சிறுமிக்கும் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (19) என்பவருக்கும், டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.  கடந்த 7 மாதங்களுக்கு முன் சாந்தகுமார், தனது பெற்றோர் சம்மதத்துடன் சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பமானார். இதனிடையே, சிறுமி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்ததால், சாந்தகுமாரின் பெற்றோர், சிறுமியை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால், ஆற்காடு அடுத்த தாமரைபாக்கத்தில் போலி மருத்துவர் பாஷா (38) கிளினிக்கில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார்.

மேலும், சாந்தகுமாரின் பெற்றோர், சிறுமியை விரட்டியடித்தால், காட்பாடியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தஞ்மடைந்துள்ளார்.
இதுகுறித்து காப்பக அலுவலர்கள், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து போலி டாக்டர் பாஷா, சாந்தகுமார், அவர்களது உறவினர்கள் 3 பேரை நேற்று கைது செய்தனர்.

Tags : Chennai ,rape ,doctor ,
× RELATED சென்னையில் மேலும் 483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி