×

மழைக்காலம் துவங்குவதால் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க ஏற்பாடு

குமாரபாளையம், அக்.16:  குமாரபாளையம் நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு, காவிரியில் இருந்து 7.31  எம்எல்டி தண்ணீர் எடுத்து, காவேரி நகர் சுத்திகரிப்பு நிலையத்தில்  வடிகட்டி குளோரின் கலந்து குழாய்கள் மூலம் வினியோகித்து  வருகின்றனர். தற்போது  மழைக்காலம் துவங்கியுள்ளதால், மழைநீருடன் கழிவுநீர் காவிரியில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து  குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம், நீரேற்றுநிலையங்கள், சுத்திகரிப்பு  நிலையங்கள், மேல்நிலைத் தொட்டிகள் அனைத்தும் சுத்தப்படுத்தி தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளது. குளோரின் கலந்த பாதுகாக்கப்பட்ட குடிநீரை அருந்துவதால்  மழைக்கால நோய் தொற்றில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்க முடியும்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு  கூறுகையில், ‘மழைக்காலத்தில் குடிநீர் மூலம் ஏற்படும் நோய்களை தவிர்க்க,  அனைத்து சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் தொட்டிகள் சுத்தம்  செய்யப்பட்டுள்ளது. தினமும் ஒருநபருக்கு 102 லிட்டர் குடிநீர் கிடைக்கும்  வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் அல்லாத தேவையை தீர்க்கும் பொருட்டு 35 அடி குழாய்களும், 165 சிறு  மின்விசை இறைப்பான்களும் பழுது நீக்கி தயார் நிலையில் உள்ளது,’ என்றார்.

Tags : season ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு