×

மன்னார்குடியில் நடந்தது பகத்சிங் பிறந்த நாள் கருத்தரங்கம்

மன்னார்குடி, அக்.1: மன்னார்குடியில், சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் 113வது பிறந்தநாள் கருத்தரங்கம் அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் ஒன்றிய குழு சார்பில் அதன் ஒன்றிய செயலாளர் பாப்பையன் தலைமையில் நடை பெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெரு மன்ற மாவட்ட செயலாளர் துரைஅருள்ராஜன், சிபிஐ ஒன்றிய செயலாளர் வீரமணி, மாவட்டக்குழு உறுப் பினர் ரத்தினகுமார், மாணவர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டு பேசுகையில், மாவீரன் பகத்சிங் நாட்டின் விடுதலைக்காக போராடினார். 23 வயது கொண்ட ஒரு இளைஞன் தீவிர போராட்டங்களை நடத்துகிறானே என்று அச்சம் கொண்ட ஆங்கிலேயர்கள் பகத்சிங் நாடாளுமன்றத்தில் வெடி குண்டு வீசினார் என்று வழக்கு பதிவு செய்தது கைது செய்து அவருடன் ராஜகுரு, சுகதேவ். ஆகிய இருவரையும் சேர்த்து 1931ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி லாகூர் சிறையில் ஆங்கிலேய அரசு தூக்கிலிட்டது. சிறு வயதில் தன் வாழ்க்கை, தன் குடும்பம் என்று பாராமல் தங்கள் உயிரை யே மூவரும் நாட்டிற்காக தியாகம் செய்தனர் இவர்களை நினைவில் கொண்டு இக்கால இளைஞர்கள் கல்விக்காக, வேலைக்காக, நாட்டிற்காக போராட முன் வர வேண்டும் என பேசினார்.

Tags : Bhagat Singh ,birthday seminar ,Mannargudi ,
× RELATED மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு...