×

உடல் கருகிய பெண் சாவு

திருச்செங்கோடு, அக்.1: திருச்செங்கோடு பக்தவச்சலம் நகரில் உள்ள லைன் வீட்டில் வசித்து வந்தவர் செல்வம்(60). இவரது மனைவி ஜீவா(56). இருவரும் தறிப்பட்டறை வேலைக்கு சென்று  வந்தனர். இந்நிலையில், கடந்த 19ம் தேதி, சமையல் செய்ய சிலிண்டரை திறந்து விட்டு மறதியாக திரி ஸ்டவ்வை ஜீவா பற்ற வைத்தார். இதனால், அறையில் பரவியிருந்த கேஸ் தீப்பிடித்து ஜீவாவின் ஆடையில் பற்றிக்கொண்டது. இதில், உடல் கருகி படுகாயமடைந்த அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜீவா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : death ,
× RELATED உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சூரியகாந்தி விதைகள்!