×

வாகன விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலை இணைப்பு ரோடுகளில் சோலார் விளக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை

திருப்புத்தூர், அக்.1:  திருப்புத்தூர் பகுதியின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு ரோடுகளில் சோலார் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூரிலிருந்து திருப்புத்தூர் வழியாக மானாமதுரை வரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் பல முக்கிய ஊர்களுக்கு செல்லும் இணைப்பு ரோடுகள் உள்ளன. இதில் பெரும்பாலான இணைப்பு ரோடுகள் ஊருக்குள் செல்வதற்கு 2 முதல் 4 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்பு ரோடு வருகிறது. திருப்புத்தூர் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் பல கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு ரோடுகள் உள்ளன. இரவு நேரங்களில் கிராமங்களில் உள்ள இணைப்பு ரோட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு வரும் போது, நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் தெரிவது கிடையாது.

இந்த இடங்களில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருப்பதால் நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வரும் வாகனங்கள் இணைப்பு ரோடுகளின் சந்திப்புகளில் வரும் டூவிலர் மற்றும் வாகனங்களில் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதில் சிலர் இறந்து உள்ளனர், பலருக்கு படுகாயங்களும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலை இணைப்பு ரோடுகளில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சோலார் விளக்குகள் அமைக்க வேண்டும். ரோடுகளின் பிரிவில் ஊரின் பெயர் அறிவிப்பு பலகை எழுதி வைக்க வேண்டும் என கிராமத்தினரும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorists ,highway link roads ,car accident ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...