×

குற்றாலத்தில் ஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

தென்காசி, செப்.30: குற்றாலத்தில் பேரூர் திமுக சார்பில் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. பேரூர் செயலாளர் மந்திரம் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவக்குமார், தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் நாகராஜ் சரவணார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் புதிய உறுப்பினர்களுக்கு அட்டையை வழங்கி பேசினார்.

முகாமில் அவைத்தலைவர் கோபால், துணைச் செயலாளர்கள் பழனி, முருகன், இளைஞரணி சதீஷ் கணேஷ், சின்னத்தம்பி, வார்டு பொறுப்பாளர்கள் குட்டி, கண்ணன், சோமசுந்தரம், இசக்கி, தகவல் தொழில் நுட்ப அணி குத்தாலிங்கம், கருப்பையா, சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி, மாரியப்பன், ரத்தின பாண்டி, ராமர், இலக்கிய அணி பண்டாரசிவன், சங்கர், காளிராஜ், அழகு தமிழ்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,Admission Camp ,Courtallam ,
× RELATED திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்