×

2 அரசு பஸ்கள் ஜப்தி

பெரியகுளம், செப். 30: திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் போஸ் மகன் முரளிதரன் (19), கடந்த 2011 மே 19ல் தேனி வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பம் வாங்கிவிட்டு, தேனி செல்ல அரசு பஸ்சில் ஏறிச் சென்றார். வீரபாண்டி அருகே, பின்னால் வந்த தனியார் பஸ், அரசு பஸ்சில் மோதியதில் பலத்த காயமடைந்த முரளிதரன் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். முரளிதரன் பயணம் செய்த அரசு பஸ் பெரியகுளம் அரசு போக்குவரத்துக்கு சொந்தம் என்பதால், அந்த நிர்வாகம் இழப்பீடு வழங்கக்கோரி, பெரியகுளம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் முரளிதரன் தந்தை வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திலகம், ‘போஸ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்து 63 ஆயிரம் இழப்பீடு வழங்க, 2018 ஜூலையில் உத்தரவிட்டார். இழப்பீடு வழங்க தாமதம் ஆனதால், நிறைவேறுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி திலகம், வட்டியுடன் சேர்த்து ரூ.12 லட்சத்து 20 ஆயிரத்து 703ஐ வழங்குமாறும், தவறும் பட்சத்தில் இரண்டு அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்பேரில் பெரியகுளம் பஸ்நிலையத்தில் நேற்று புறப்பட தயாராக இருந்த 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.

Tags : Government ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...