×

குற்றச்சம்பவங்களை தடுக்க கடைகளில் சிசிடிவி பொருத்துவது அவசியம் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்


சின்னமனூர், செப். 30: குற்றச்சம்பவங்கள், திருட்டை தடுக்க வணிக வளாகங்களில், நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என போலீசார் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. சின்னமனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குற்றச்சம்பவங்கள் மற் றும் விபத்துகளை தடுப்பது குறித்த ஆலோனை கூட்டம், இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் நடந்தது. இதில், வணிகர்கள் சங்கம், நகைக்கடை சங்க மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘வணிக வளாகங்கள், நகைக்கடைகளில் நடக்கும் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். நிறுவனம் மற்றும் கடைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும். அதன் மூலம் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணித்து தடுக்க வேண்டும். ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதித்து விபத்துகளை தடுக்க வேண்டும். அனைவரும் விதிகளை பின்பற்றி விபத்து இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும். கொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags : consultation meeting ,CCTV ,stores ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...