×

நிதி நிறுவனங்கள் செய்யும் அடாவடி வசூலை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

காரைக்குடி, செப்.30:  காரைக்குடி கல்லூரி சாலையில் சிஐடியூ சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சிவாஜி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வீரையா, மாவட்ட பொதுச்செயலாளர் விஐயகுமார், மாவட்ட துணைத் தலைவர் அழகர்சாமி, மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், தெட்சிணாமூர்த்தி, மாவட்டதுணை தலைவர் கணேசன், நகர தலைவர் வெங்கடேஸ்வரன், நகர செயலாளர் வெங்கிட்டு, நகர பொருளாளர் முருகேசன், சிபிஎம் தாலுக்கா குழு உறுப்பினர் சுப்பிரமணி, பத்மநாபன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

கொரோனாவால் ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் ஆட்டோ தொழிலாளர்கள் பெற்ற கடனை நிதி நிறுவனங்கள் அடவாடி வசூலை செய்வதை நிறுத்த வேண்டும். வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் வட்டிக்கு, வட்டி போட்டு இஎம்ஐ வசூல் செய்வதை தடுக்க வேண்டும். காரைக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அனுமதி இல்லாமல் பணத்தை எடுத்த கிளை மேலாளர் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் பிரிமியத்தை ஒருவருடம் நீடித்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

Tags : Demonstration ,institutions ,
× RELATED நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்