×

ஆணையர் எச்சரிக்கை

ஒட்டன்சத்திரம், செப். 25: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நகரிலுள்ள வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரமும், சிறிய கடைகளுக்கு ரூ.500ம், பொதுமக்களுக்கு ரூ.200ம் அபராதம் விதிக்கப்படும் என ஆணையாளர் (பொ) லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மார்த்தாண்டம் மார்க்கெட்டில்...