×

ஓபிசிக்கு இடஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம்

ராசிபுரம், செப்.25: நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை களம் நிறுவனத் தலைவர் நாகராஜன்  தலைமையில், 2021ல்  ஓபிசி கணக்கெடுப்பு நடத்தவும் மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு  வழங்கக்கோரி,  ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு கொங்கு  இளைஞர் பேரவை சேகர், தேசிய செட்டியார்கள் பேரவை தங்கராஜ், தொட்டிய நாயக்கர்  அறக்கட்டளை பொருளாளர் சின்னுசாமி, தலைமை நிலைய செயலாளர் மணி, அஹிம்சா  சோசலிஸ்ட் கட்சி ரமேஷ், விடுதலைக்களம் மாநில துணைத்தலைவர் பாலு,  நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜன், தலைவர்  செங்கோட்டுவேல் உட்பட 100க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,
× RELATED மருத்துவப் படிப்புகளில் நடப்பாண்டில்...