×

விவசாய சட்டமசோதாவை திரும்ப பெறக்கோரி நெல்லையில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்


நெல்லை, செப். 25:  விவசாய சட்டமசோதாவை திரும்ப பெறக்கோரி நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கும் புதிய 3 விவசாய சட்டமசோதாக்களை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நெல்லை பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுதி தலைவர் புகாரி சேட் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கனி, துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, செயலாளர்கள்  பேட்டை முஸ்தபா, பர்கிட் அலாவுதீன், முல்லை மஜீத், பொருளாளர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய அணி தலைவர் மானூர் சேக் அப்துல்லா கண்டன உரை ஆற்றி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது 3 புதிய மசோதா நகல் கிழித்து எறியப்பட்டதுடன், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொகுதி துணை தலைவர் சலீம்தீன், மஹ்பூப்ஜான், இணை செயலாளர்கள் மீரான், பாளை சிந்தா, ஜவுளிகாதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அரண்மனை முபாரக், மின்னதுல்லாதொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் பஷீர்லால், கல்வத், முகம்மது காசிம், செய்யது, நெல்லை தொகுதி நிர்வாகிகள் ஜெய்லானி, ரிபாய், காஜா, பேட்டை காஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். போலீசாரின் அனுமதியின்றி தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் நெல்லை வருமான வரித்துறை அலுவலகம் முன்பு மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் வக்கீல் இளமாறன் கோபால் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் ஒண்டிவீரன் முருகேசன், மாவட்ட செயலாளர் திருக்குமரன் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் வேல்ராஜ், மக்கள் அதிகாரம் அன்பு, தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags : protest ,STBI ,withdrawal ,Nellai ,
× RELATED விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்