×

மண்டைக்காடு அருகே ஆடு திருட்டு

குளச்சல்,செப் 25: மண்டைக்காடு அருகே கருமங்கூடலை சேர்ந்தவர் ராஜாகோபால் (74). விவசாயி. இவர் வீட்டில் 2 ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த 22 ம் தேதி நள்ளிரவு இவரது வீட்டில்  கட்டிப்போட்டிருந்த ஆடுகளின்  சப்தம் கேட்டு எழுந்த  ராஜகோபால் வெளியே வந்து பார்க்கும் போது ஒரு ஆட்டை காணவில்லை. மர்ம நபர் யாரோ? திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடிய மர்ம நபர் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர்.

Tags : Mandakkadu ,
× RELATED சித்தோடு அருகே ஆடு திருடுவதை தடுக்க முயன்ற முதியவர் கொலையில் 3 பேர் கைது