×

ஊட்டி நகரில் தடையை மீறி சுவற்றில் அரசியல் போஸ்டர்கள்

ஊட்டி, செப்.25:  ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடையை மீறி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்தும், மீறி ஒட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது. இந்த உத்தரவை மீறி நகரின் பல பகுதிகளிலும் நகராட்சிக்கு சொந்தமான சுவர்கள், கோடப்பமந்து கால்வாயை மறைத்து அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் என பல இடங்களில் ஆளுங்கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதனால் அசுத்தமாக காட்சியளிக்கின்றன. சில இடங்களில் நகராட்சி ஊழியர்கள் இவற்றை அகற்றினார்கள். இருப்பினரும் ஒரிரு இடங்களில் போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளது. ஆளுங்கட்சி என்பதால் அபராதம் விதிக்க நகராட்சி தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. எனவே ஊட்டி நகரின் சுற்றுசூழல் மற்றும் அழகினை கெடுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Ooty ,
× RELATED மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்தி போஸ்டர்...