×

மழை குறைந்தது மலை காய்கறிகளுக்கு உரமிடும் பணியில் விவசாயிகள் மும்முரம்

ஊட்டி,ஆக.22:  நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதம் வரை தென்ேமற்கு பருவமழை பெய்யும்.  இதனால், தேயிலை விவசாயம் மற்றும் மலை காய்கறி விவசாயம் சூடுபிடிக்கும். இம்முறை எதிர்பார்த்த அளவிற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மழை பெய்யவில்லை. ஆனால், கடந்த வாரம் சில நாட்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.குறிப்பாக, ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் மஞ்சூர் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது.

இதனால், தற்போது விவசாயிகள் மலைப்பாங்கான பகுதிகளிலும் கூட காய்கறிகளை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், பெரும்பாலான பகுதிகளில் விதைப்பு பணிகள் முடிந்த நிலையில், தற்போது பயிர்களுக்கு தேவையான உரமிடும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் தற்போது விவசாயிகள் மலைகாய்கறி பயிர்களுக்கு மட்டுமின்றி, தேயிலைக்கும் உரமிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதமாக விளைவித்த பொருட்களை வெளியில் கொண்டுச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, தற்போது பயிரிடும் பணிகள் துவக்கப்பட்டுள்ளதால், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை மானிய விலையில் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்