×

கொரோனா எதிரொலியால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

தொண்டி, மார்ச் 20:  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொண்டியில் 25 நாள்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு கொரோனா பாதிப்பு எதிரொலியாக தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், கைவிடக் கோரியும் கடந்த 25 நாட்களாக தொண்டியில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போராட்டம் மற்றும் பொது கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று தொண்டியில் போராட்ட குழுவினரிடம் திருவாடானை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் விளக்கி கூறினார். இதனால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், எங்களின் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags : protest ,government ,Corona ,
× RELATED ஓபிஎஸ் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு