×

ராசிபுரம் நகராட்சியில் விடுமுறை நாளிலும் வரி செலுத்த ஏற்பாடு

ராசிபுரம், மார்ச் 20:ராசிபுரம் நகராட்சிக்கு, வார விடுமுறை நாளிலும் வரியினங்களை செலுத்தலாம் என ஆணையாளர் தெரிவித்துள்ளனர். ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் (பொ) நடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடைகளின் வாடகை மற்றும் தொழில் உரிம கட்டணம் உள்ளிட்டவைகளை நிலுவையின்றி செலுத்தி ரசீதுகள் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதற்காக நகராட்சி அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து வார்டுகளிலும் வரிவசூல் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.

வரிகளை கட்ட தவறுபவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கைகள் எடுக்கப்படும். நகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்த தவறினால், குத்தகைதாரர்கள் உரிமைத்தை ரத்து செய்வதோடு, கடையை பூட்டி சீல் வைக்கப்படும். பொதுமக்களின் வசதிக்காக நகராட்சி கணினி மையம், வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும். பொதுமக்கள் இணையதள வழியாகவும் பணம் செலுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Tax holiday ,municipality ,Rajipuram ,
× RELATED மீஞ்சூர் பேரூராட்சிக்கு துணை மின்...