×

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்

ஊட்டி, மார்ச் 20: ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளை நம்பியே தொழில் செய்து வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பழம், காய்கறி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்துச் செல்வது வழக்கம். குறிப்பாக, ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா ேபான்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.    ஊட்டிக்கு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை சுற்றுலா பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரிக்கும். இதுபோன்ற சமயங்களில் ஊட்டி நடைபாதைகள், பார்க்கிங் மற்றும் நுழைவு வாயில் பகுதிகளில் பழம், தொப்பி, பொம்பை, காய்கறிகள் போன்ற பொருட்களை சிலர் வியாபாரம் செய்து வந்தனர். இந்த சிறு தொழில் மூலம் வியாபாரிகளுக்கு  கணிசமான லாபம் கிடைத்து வந்தது. இந்த நிலையில் இம்மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை மிக அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ெதாட்டபெட்டா, படகு இல்லம், ரோஜா பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ள.

ேமலும், இம்மாதம் 31ம் தேதி வரை ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் ஊட்டி வருவதை தவிர்த்துவிட்டனர். இதனால், சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாத நிலையில், இதனை சுற்றி கடை வைத்துள்ளவர்களில் 90 சதவீதம் பேர் கடைகளை மூடிவிட்டனர். இதில், பெரும்பாலானவர்கள், பழங்கள், காய்கறிகள், ேசாளம், பொம்மைகள் விற்பனை செய்பவர்களே அதிகம்.  சுற்றுலா பயணிகள் வராத நிலையில், விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த பல ஆயிரம் மதிப்புள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் அழுகும் அபாயம் ஏற்ட்டுள்ளதால் கடும் நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தில் வியாபாரிகள் வருத்தமடைந்துள்ளனர். விரைவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் ஒழிந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வழக்கம் போல் வர வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Tags : tourist destinations ,
× RELATED ஃப்ரூட் மிக்ஸ் ரஃப்டி