×

காட்டுக்காநல்லூர், ஆரணி, செங்கத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

கண்ணமங்கலம், மார்ச் 20: கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் பெரிய ஏரியில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பணியாளர்களுக்கு கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ரேணு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுதாகர், பணிதள பொறுப்பாளர்கள் சரஸ்வதி, பரிமளா முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் தேவராஜ் வரவேற்றார். ஆரம்ப சுகாதார ஆய்வாளர் வேலாயுதம் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து செயல் விளக்கம் அளித்தார். ஆரணி: ஆரணியில் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு முகாம் பழைய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. நகராட்சி பொறியாளர் கணேசன் தலைமை தாங்கினார். போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் வெங்கடேசன், சித்த மருத்துவர் சங்கரேஸ்வரி முன்னிலை வகித்தனர். களப்பணி உதவியாளர் சரவணன் வரவேற்றார்.

இதில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும், பஸ்களில் கிரிமிநாசினி தெளிக்கப்பட்டது. செங்கம்: செங்கம் அடுத்த தர்பார்பாளையம் கிராமத்தில் நேற்று மேல்பள்ளிபட்டு வட்டார மருத்துவமனை சார்ப்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா கோபி வரவேற்றார். மேல்பள்ளிபட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விளக்கம் அளித்தார். முடிவில் சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.காட்டுக்காநல்லூரில் சுகாதார ஆய்வாளர் வேலாயுதம் கொரோனா வைரஸ் குறித்து செயல் விளக்கம் அளித்தார். உடன் ஊராட்சி தலைவர் ரேணு.

Tags : Coronavirus Awareness Camp ,Arani ,Chengam ,
× RELATED வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது *...