×

மாதிரி கிராமமாக நடராஜபுரம் தேர்வு விவசாயிகளுடன் 8 துறை அதிகாரிகள் கலந்துரையாடல்

திருவெறும்பூர், பிப்.28: தமிழக அரசு பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை சார்பில் நீர்வள நிலவள மேம்பாட்டு திட்டம் 2019 மற்றும் 2020ம் ஆண்டில் பொன்னனி ஆறு உபவடிநில பகுதி மாதிரி கிராமமாக நடராஜபுரத்தை தேர்வு செய்து 8 துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். உலக வங்கி நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் பொன்னணியாறு நிலப்பகுதியில் திருச்சி மாவட்டத்தில் 10 மாதிரி கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் கிராமமும் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளது. இது சம்பந்தமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாந்தி தலைமை வகித்தார். வேளாண் ஆலோசகர் ஷாஜகான், சுற்றுச்சூழல் ஆலோசகர் ஜிடித்டீசில்வா மற்றும் கால்நடைத்துறை, மீன்வளத்துறை உட்பட 8 துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் ஊழியர்களும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலில் விவசாயிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சந்தித்து அவர்களின் குறைகளை 8 துறைகளை சார்ந்த அலுவலர்கள் கேட்டறிந்து தோடு கிராமத்தில் நீர்வளம் குறித்தும், பயிர்கள் மூலம் மேன்மை காணுதல் கிராமத்தில் புள்ளி விவரங்களை சேகரித்தல், கிராம நீராதார குறித்த சமுதாய ஆய்வு, ஒற்றைச் சாளர தகவல் மையத்தின் சிறப்பம்சம் மற்றும் அதன் பயன்கள் என பல நிகழ்ச்சிகள் குறித்து கலந்துரையாடினர். மேலும் இந்த 8 அரசு துறைகள் மூலம் நடராஜபுரம் கிராமத்திற்கு மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கமாக தெரிவித்தனர். முன்னதாக ஒற்றைச்சாளர தகவல் மையத்தை நடராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியகீதா திறந்து வைத்தார். இந்த ஒற்றைச் சாளர தகவல் மையத்தில் இந்த எட்டு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வாரம் ஒருவர் என வந்து விவசாயிகளின் பிரச்னை கடை கேட்பார்கள் அவர்களிடம் விவசாயிகள் தங்களது பிரச்னைகள் மற்றும் குறைகள் குறித்து தெரிவிக்கலாம். அது குறித்து தீர்வுகள் கிடைக்கும் என்று ஷாஜகான் கூறினார்.
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், திருமாறன் உதவி பொறியாளர் தினேஷ் கண்ணன், பூங்குன்றன் உட்பட பலர் கலந்துகொண்டனர். விவசாயி முருகதாஸ் நன்றி கூறினார். காந்தி மார்க்கெட் ஆர்ச் முதல் அஞ்சுமன் பஜார் வரையிலான பகுதியில் தள்ளுவண்டிகள், தரைக்கடைகளால் அப்பகுதியில் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : model village ,
× RELATED 2021-22, 2022-23ம் ஆண்டுக்கான சுகாதார...