×

புதன்சந்தை அருகே அடைக்கலம் காத்தான் திருவிழா தொடக்கம்

சேந்தமங்கலம், பிப்.28: புதன்சந்தை அடுத்துள்ள முத்துடையார்பாளையம் அடைக்கலம் காத்தான் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி நாளை(29ம் தேதி) சாமிக்கு சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெற உள்ளது. உட்பிரகாரத்தில் உள்ள பைரவர், விநாயகர், மதுரை வீரன், பாஞ்சாலி, சகாதேவன், மகாதேவன் ஆகிய சுவாமிகளுக்கு, பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வான வேடிக்கை நடக்கிறது. வரும் 1ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முத்துடையார்பாளையம் மாரியம்மன் கோயிலில் இருந்து மேள தாளத்துடன் வேல் எடுத்து வந்து, பாதாள காவு முப்பூஜை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பங்காளிகள் செய்துள்ளனர்.

Tags : Refugee Caitan Festival ,
× RELATED ராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி