×

ஒரே நாளில் 40 கடைகளில் சோதனை 52 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

குமாரபாளையம், பிப்.28: குமாரபாளையத்தில் ஓரே நாளில் 40 கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 52 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ₹8 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, நகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஒரே நாளில் நகராட்சி பகுதியில் உள்ள 40 கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டம்ளர்கள், கப்புகள் என 52 கிலோ எடையுள்ள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள், சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் நகராட்சி குப்பை கிடங்கிற்கு அனுப்பப்பட்டது.

Tags : stores ,
× RELATED மேலூரில் 4 நாட்களுக்கு மருந்து கடைகள்...