×

டெல்லியில் நடைபெற்ற மனித உரிமை மீறலுக்கு கண்டனம்

கூடலூர்,பிப்.28: டெல்லியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் கூடலூரில் நேற்று நடைபெற்றது. முஸ்லீம் லீக் கட்சி தலைவர் கேபி முகமது தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. சார்பில் பாண்டியராஜ், ராஜேந்திரன், சுப்பிரமணி, காங்கிரஸ் கட்சி சார்பில் கேபி முகமது, அம்சா, ஷாஜி, சிபிஎம் வாசு, சிபிஐ குணசேகரன், முகமது கனி, விடுதலை சிறுத்தைகள் சகாதேவன், அமமுக முஜிபுர்ரகுமான், செந்தில், முஸ்லிம் லீக் அனிபா, நாசர் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: டெல்லியில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து இன்று (28ம் தேதி) மாலை கூடலூர் புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. கலவரத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு  வழங்க வேண்டும். வன்முறை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மார்ச் எட்டாம் தேதி மாலை கூடலூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து கண்டனப் பேரணியும் காந்தி திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Delhi ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...