×

பிரான்மலையில் குப்பைகளை எரிப்பதால் சுகாதாரக்கேடு

சிங்கம்புணரி, பிப்.28: சிங்கம்புணரி அருகே பிரான்மலை ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாபட்டி, மதகுபட்டி, ரதவீதி பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக அல்லாமல் சாலை ஓரங்களில் தீ வைத்து எரித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குப்பைகளை தரம் பிரித்து குப்பை மேலாண்மை செய்ய அரசு கால்நடை மருத்துவமனை அருகே இடம் உள்ளது. ஆனால் தெருக்களில் குப்பைகள் முறையாக பெறப்படாமல் சிதறி கிடைக்கிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை முறையாக அள்ளி தரம்பிரித்து குப்பை மேலாண்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : France ,
× RELATED மேலமுந்தல் பகுதியில் கடற்கரையில்...