×

தனியார் கார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் கையாடல் செய்த கேசியர் கைது

திருப்பரங்குன்றம், பிப்.28: தனியார் கார் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கையாடல் செய்த கேசியர் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனியார் கார் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கேசியராக வேலை பார்த்து வருபவர் மதுரையைச் சேர்ந்த நாகரத்தினம்(32). இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் செலுத்தும் இன்சூரன்ஸ் தொகையை இன்சூரன்ஸ் நிறுவன கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளதை தணிக்கையின் போது கணக்கு மேலாளர் கோபாலகிருஷ்ணன் கண்டுபிடித்ததாக தெரிகிறது. மொத்தம் ரூ.5 லட்சத்து 16 ஆயிரத்து 406ஐ கேசியர் நாகரத்தினம் கையாடல் செய்ததாக கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து நாகரத்தினத்தை கைது செய்தனர்.

Tags : Cashier ,car company ,
× RELATED அடமான நகையை திருப்பிய பிறகு நெல்லை...