×

பாதுகாக்கப்பட்ட வேளாண். மண்டலத்தில் கரூரை சேர்க்காத பிரச்னை: அமைச்சர் மவுனம் ஏன்?

கரூர், பிப். 28: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்வளர்ச்சித்துறை கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக்கூட்டம் கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது, பின்னர் எம்பி ஜோதிமணி கூறியது:நூறு நாள்வேலை திட்டத்தில் 6 மாதம் சம்பளம் வராமல் இருந்தது. பாராளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தினேன். நன்றி செல்ல நான் கிராமங்களுக்குப் போகும்போது மக்கள் கண்கலங்கி முறையிட்டனர். பாராளுமன்றத்தில் இதுபற்றி நான்பேசிய பிறகு பகுதி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் இரண்டரை மாதம் சம்பளம் கொடுக்கவில்லை.கரூர் மாவட்டத்தை பொறுத்தளவில் ரூ.1 கோடி சம்பளமும், மெட்ரீரியல் ரூ.16 கோடி எனவும் நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 600 முதல் 700 கோடி கொடுக்காத ஒரு அரசை பாஜக நடத்தி கொண்டிருக்கிறது.மண்மங்கலம், தவிட்டுப்பாளையம், கோடங்கிப்பட்டி, வீரராக்கியம் உள்பட கரூர் எம்பி தொகுதியில் 8 இடங்களில் அதிக விபத்து நடப்பதாக பேசியதை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் மேம்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டள்ளது. கரூர் அருகே வள்ளுவர் நகரில் சாக்கடை பிரச்னை நீண்ட காலமாக இருப்பதற்கு தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

வறட்சி வரும் நிலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. நன்றி சொல்லபோகும்போது கிராமங்களில் எல்லாம் காவிரி தண்ணீர் முறையாக வருவதில்லை. போர்வெல்லில் தண்ணீர் இல்லை என தொடர்ந்து கூறி வருகின்றனர்.இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் 8 ஊராட்சிஒன்றிய தலைவர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தும் கலந்து கொள்ளவில்லை. அதிமுக மக்களைப்பற்றி நினைப்பதில்லை.அதிகாரிகள் துணையோடு முறைகேடாக ஊரக உள்ளாட்சித்தேர்தலை நடத்தி பதவிக்கு வந்துள்ளனர், அப்படி இருந்தும் மக்களைப்பற்றி கவலையிருந்தால் வந்திருக்க வேண்டும். மக்கள் நலப்பணிகளில் அமைச்சருக்கு ஆர்வம் இருக்குமானால் வேளாண் மண்டலத்தில் கரூரைசேர்க்கவில்லை என்பதைப்பற்றி பேசியிருக்க வேண்டும். ஆனால் மவுனமாக இருக்கிறார். அவரது நிலைப்பாடுதான் அக்கட்சியின் மக்கள் பிரநிதிகளுக்கும் உள்ளது, அடுத்த தேர்தலில் நீங்கள் வரப்போவதில்லை. ஒருவருடம் இருக்கிறது இந்தக்காலத்திலாவது வரும் கூட்டங்களில் பங்கேற்று வாங்கிய ஓட்டுக்கு துரோகம் செய்யாமல் வளர்ச்சியை பற்றி சிந்திக்க வேண்டும். சொந்த வளர்ச்சியைப்பற்றி மட்டுமே சிந்திக்காதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்,
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : zone ,Karur ,
× RELATED கோடையிலும் குளுமை தரும் சிறுதானிய...