×

கறம்பக்குடியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்

கறம்பக்குடி, பிப்.28: கறம்பக்குடியில் இன்று ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுகிறது. அப்பகுதியில் உள்ள முருகன் கோயிலை இடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டள்ளது.கறம்பக்குடி பேரூராட்சியில் நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி சார்பில் கறம்பக்குடி கடைவீதி, டோல்கேட், மீன்மார்க்கெட், பள்ளிவாசல் வீதி, அம்புகோயில் முக்கம் உள்பட அனைத்து பகுதிகளிலும் கடந்த 2 மாதங்களாக ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று கறம்பக்குடி பெரியகடைவீதி, கச்சேரி வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் இன்னும் ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றாததால் போலீஸ் பாதுகாப்புடன் இன்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ளது.

இதேபோல் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலை இடிக்க கோயில் நிர்வாகத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பில், இரண்டு தினங்களுக்கு முன் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கட்டுமானம் முழுவதும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் மற்றும் பொருட்களை வருகிற 9ம் தேதிக்குள் இடித்து அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் வருகிற 10ம் தேதி கோயில் இடிக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Karambakkudi ,
× RELATED மோடியும், எடப்பாடியும் தம்பதி போல்...