×

பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் மாரடைப்பு நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு துவக்கம்

பரமத்திவேலூர், பிப்.26: பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள மாரடைப்பு நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவினை மக்கள் பயன்பாட்டிற்கு மூர்த்தி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனை 50க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் 10 மருத்துவர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் என்னும் ரத்த சுத்திகரிப்பு மற்றும் மாரடைப்பு நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகள் ஏற்படுத்தக்கோரி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மூர்த்தி எம்எல்ஏ, சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை உயரதிகாரிகளுடன் பேசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, டயாலிஸிஸ் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்கள் அடங்கிய புதிய வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அவசர சிகிச்சை பிரிவினை மூர்த்தி எம்எல்ஏ மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சாந்தி உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Heart Attack Patients ,Emergency Unit ,Paramathi Vellore Government Hospital ,
× RELATED ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம்...