×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

ஊத்துக்கோட்டை, பிப். 26: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அம்பேத்கர் நகர், சிட்ரபாக்கம், ரெட்டி தெரு, செட்டி தெரு, சாவடி தெரு, கலைஞர் தெரு, சிவன் கோயில் தெரு, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, அண்ணா நகர், நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை, கால்வாய்கரை  என 15 வார்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு காவல் நிலையம், தாலுகா அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களும் உள்ளன.   சென்னை-திருப்பதி  சாலையில் உள்ள 10வது வார்டான நேரு பஜார் பகுதியில் மட்டும் மளிகை, காய்கறி, ஜவுளி கடை என 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க ஆயிரக்காணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இதனால், நேரு பஜார் பகுதியில் குப்பைகள் அதிகமாக சேருகிறது. இந்த குப்பைகள் காற்று அடிக்கும்போது அருகில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள கழிவு நீர் கால்வாய்க்கு செல்கிறது. இதனால், குப்பை கழிவுகள் அதிகமாக சேர்ந்து மக்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது.  இந்த கொசுக்கள் இரவு நேரங்களில் படையெடுத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடிகிறது.  இந்த கொசுக்கள் கடிப்பதால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களால்  சிலர் தவிக்கிறார்கள்.  எனவே, கொசுவால் ஏற்படும் நோய்களை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த மாதம்  செய்தி வெளியானது. இதையறிந்த பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு உத்தரவின்பேரில் துப்புரவு மேற்பார்வையாளர் குமார் தலைமையில் ஊத்துக்கோட்டை முழுவதும் கொசுவை ஒழிக்க பேரூராட்சி சார்பில் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...