×

வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை, பிப்.20: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடக்கு ராஜ வீதியில் உள்ள தி.மு.க அலுவலத்தில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வருகிற மார்ச் 1ம்தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, திமுகவின் உட்கட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், சந்திரசேகரன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Northern District ,Advisors Meeting ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி