×

மகாசிவராத்திரியை முன்னிட்டு மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ் இயக்கம்

சேலம், பிப்.19: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சேலம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில், பண்டிகை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரும் 21ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சேலத்தில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், மேட்டூரிலிருந்து கொளத்தூர், பாலாறு வழியாகவும், தர்மபுரியிலிருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல், கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி, மேட்டூர் வழியாகவும், ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாகவும், ஈரோட்டில் இருந்து பவானி, மேட்டூர் வழியாகவும் மாதேஸ்வரன் மலைக்கு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. நாளை (20ம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரை இயக்கப்படவுள்ள இந்த சிறப்பு பஸ்களை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, நெரிசலின்றி பயணம் செய்யலாம் என சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : hill ,Maheshwaran ,Mahashivaratri ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!