×

தனியார் விதை விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

புதுக்கோட்டை, பிப்.19: தனியார் விதை விற்பனையாளர்கள் கூடுதல் விற்பனைக்கு விதை விற்றால் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் என புதுக்கோட்டை கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் முடிவுற்று கோடை நெல் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். எனவே விவசாயிகள் போதுமான நீர் பாசனம் உள்ள இடங்களில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. அறுவடைப் பணி முடிந்து நீர் பாசன வசதி உள்ள இடங்களில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் கோடை நெல் சாகுபடிக்கு உகந்த குறுகிய கால நெல் ரகங்களான ஆடுதுறை-37 சான்று பெற்ற நெல் விதை 11 மெட்ரிக் டன்களும், ஆடுதுறை-45 நெல் விதை 7.45 மெட்ரிக் டன்களும், கோ-51 நெல் விதை 7.5 மெட்ரிக் டன்களும் மாவட்டத்தில் உள்ள கோடை நெல் சாகுபடி செய்யப்படும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதில் ஆடுதுறை-37 கிலோ ரூ.36.90 மற்றும் ஆடுதுறை 45, கோ-51 ஆகிய ரகங்கள் ரூ.37.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் நெல் ரக விதைகள் ஆடுதுறை- 36, ஆடுதுறை -53 நெல் விதை, அம்பாசமுத்திரம்-16 நெல் விதை, கோடை நெல் சாகுபடிக்கு ஏற்ற பயிர்களாகும். தேவைப்படும் விவசாயிகள் தங்கள் அருேக உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பெற்று கொள்ளலாம். தனியார் விதை விநியோகஸ்தர்கள் அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாதவாறு விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர் மீது விதை சட்டப்பிரின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : seed sellers ,
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ