×

அரசு பள்ளி மாணவர்களுக்கு கதராடை தயாரிப்பு குறித்த செயல் விளக்கம்


தேவதானப்பட்டி, பிப். 17: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கதராடை தயாரிப்பு குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தில் கதர் உற்பத்தி மற்றும் விற்பனை மையத்தினை, சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். அங்கு அவர்களுக்கு கதராடை குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மூலிகை மருந்துகள் தயாரிப்பு, ஊறுகாய் தயாரிப்பு உள்ளிட்ட தயாரிப்பு பொருட்களை பார்வையிட்டனர். விற்பனை மையத்தின் பொருட்கள் விற்பனை முறையை மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.

Tags : government school students ,
× RELATED முதியோரை அதிகம் பாதிப்பது ஏன்?: அமெரிக்க ஆராய்ச்சியாளர் விளக்கம்