×

தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியும் எந்த பயனும் இல்லை காரைக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்கள் புலம்பல்

காரைக்குடி, பிப்.17:  காரைக்குடி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியும் எந்த பயனும் இல்லை. பெயர் அளவிலேயே உயர்த்தப்பட்டு செயல்படுகிறது என நோயாளிகள், உறவினர்கள் புலம்பி வருகின்றனர். காரைக்குடி ரயில்வே பீடர் ரோடு மற்றும் திருச்சி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் பிரசவம், குழந்தைகள் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. இம்மருத்துவமனையில் சுக பிரசவம் அதிக அளவில் நடப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்ப்பிணி தாய்மார்கள் தொடர் சிகிச்சைக்காகவும், பிரசவத்திற்கு மற்றும் பிரவசத்திற்கு பிந்தைய சிகிச்சைக்கு என வருகின்றனர். மாதத்திற்கு குறைந்தது 300க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது. வெளிநோயாளிகளாக தினமும் 100க்கும் மேற்பட்ேடார் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் கர்ப்பிணி தாய்மார்களே அதிகம்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகளுக்கு  என  உணவகம் இல்லை. இதனால் உள் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கி இருப்பவர்கள் சாப்பாடு வாங்க 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள என்ஜிஜிஓ காலனி பகுதி அல்லது கழனிவாசல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவர்களை மையமாக கொண்டு அரசு மருத்துவமனையின் வெளியே சாலை ஓரங்களை முழுவதும் ஆக்கிரமித்து தரைக்கடைகள் அதிகரித்து வருகின்றன. சாலையின் முகப்பு வரை தரைக்கடைகள் உள்ளதால் எதிரே பஸ் வருவது கூட தெரியாத நிலை உள்ளது. தவிர தரைக்கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியும் எந்த பயனும் இல்லை. பெயர் அளவிலேயே உயர்த்தப்பட்டு செயல்படுகிறது. உள்நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கி இருப்பவர்களுக்கு என எந்த வசதியும் இல்லை.

அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் துவங்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு இதுவரை துவங்கப்படாமல் உள்ளனர். உணவகங்கள் அதிக தூரத்தில் உள்ளதால் வேறு வழியின்றி தரைக்கடைகளைத்தான் நம்பி இருக்கிறோம். இங்கு சுகாதாரமான உணவுகள் வழங்கப்படுவதாக தெரியவில்லை. தவிர சாலையை ஆக்கிரமித்து கடைகள் போட்டுள்ளதால் எதிரே வரும் வாகனம் கூட தெரியாத நிலை ஏற்படுகிறது என்றனர்.

Tags : relatives ,Karaikudi Government Hospital ,hospital ,
× RELATED திருச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு...